Enable Javscript for better performance
தலைநகரில் அனல் காற்றின் தாக்கம் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் அனல் காற்றின் தாக்கம் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    By DIN  |   Published on : 01st June 2019 06:41 AM  |   அ+அ அ-   |    |  

    தலைநகர் தில்லியில் அனல் காற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம், சிகப்பு - நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
    தில்லியில் இந்த மாதத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், மக்கள் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இரண்டு நாள்கள் தொடர்ந்து பரவலாக மழை பெய்ததால், புழுக்கம் குறைந்தது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அனல் காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. இதன் தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலையில் செல்வோர், வாகனம் ஓட்டுவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இதைத் தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை அன்று "சிகப்பு - நிற ' எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வானிலையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை தொடர்பாக பச்சை, மஞ்சள், அம்பர், சிகப்பு ஆகிய நான்கு நிறங்களிலான குறியீடுகளைக் கொண்டுள்ளது. இதில் பச்சை - நிறம் சாதாரண அளவிலான வெப்பநிலையாகும். ஆனால், சிகப்பு நிறம் மிகவும் கடுமையான வானிலை நிலவுவதாகக் குறிக்கிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை சிகப்பு நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    தில்லியில் வியாழக்கிழமை அன்று பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 46.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாகும். இதேபோன்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது இந்தப் பருவத்தில் அதிகபட்ச அளவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. 
    இந்நிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகரித்திருந்தது. பொதுவாக வெப்பநிலை தொடர்ந்து இரண்டு நாள்களாக 45 டிகிரியைத் தாண்டினாலே அனல் காற்று எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். அதேபோல 47 டிகிரி செல்சியஸை தாண்டினால் கடுமையான அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்படும்.
    தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 31 சதவீதமாக இருந்தது.
    முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமையும் (ஜூன் 1) அனல் காற்று வீசும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp