விதிமீறல்: பண்ணைஇல்லத்துக்கு "சீல்'!

புது தில்லியில் ஏரியா விதிகளையும், கட்டுமான துணைவிதிகளையும் மீறியதாக நஜஃப்கர் பகுதியில்

புது தில்லியில் ஏரியா விதிகளையும், கட்டுமான துணைவிதிகளையும் மீறியதாக நஜஃப்கர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை இல்லத்துக்கு தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீலிட்டு நடவடிக்கை எடுத்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு இதே போன்று நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபங்கள் மீது மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தெற்கு தில்லி மாநகராட்சி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
உச்சநீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, சமல்கா பகுதியில் உள்ள தேவம் மோட்டல்கள் சீலிடப்பட்டன. மோட்டலின் உரிமையாளர் 9ஆயிரம் சதுர அடி இடத்திற்கு மேல் கட்டியுள்ளார். மேலும், அனுமதியின்றி இரு பந்தல்களையும் அமைத்திருந்தார் என்றார் அந்த அதிகாரி.
கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தில்லியின் 90 சதவீத மோட்டல்களும், பண்ணை இல்லங்களும் நிலையான கட்டுமான துணைவிதிகளைப் பின்பற்றுவதில்லை என்றார். தெற்கு தில்லி மாநகராட்சி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு புதிய பண்ணை இல்ல கொள்கைத் திட்டத்தைக் கொண்டு வந்தது. விதிமீறிய பண்ணை இல்லங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தக் கொள்கைத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இருப்பினரும் , வளாகத்தில் சீலிங் நடவடிக்கை தொடரும் என தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com