"ஐபிபிஐ' உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்
By DIN | Published On : 12th June 2019 07:04 AM | Last Updated : 12th June 2019 07:04 AM | அ+அ அ- |

ஐபிபிஐ எனப்படும் திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ஸ்ரீராம் ஆகியோரை நியமித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இவர்களின் நியமனங்களுக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின் பேராசிரியரான சுப்ரமணியன், கடந்தாண்டு டிசம்பரில் தலைமை பொருளாதார ஆலோசகராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி, திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தை ஏற்படுத்தியது.