பேட்டரி வாகனங்களுக்கான முதல் சார்ஜிங் மையம்: செளத் எக்ஸ்டென்ஸனில் திறப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக தில்லி அரசின் பேட்டரி வாகனங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, செளத் எக்ஸ்டென்ஸன்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக தில்லி அரசின் பேட்டரி வாகனங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, செளத் எக்ஸ்டென்ஸன் சந்தைப் பகுதியில் பேட்டரி வாகனங்களுக்கான தில்லியின் முதலாவது சார்ஜிங் மையத்தைத் தில்லி மின்சாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நிகழ் நிதியாண்டில் அமைக்கப்படவுள்ள முதல் சார்ஜிங் மையமாகும். இதுபோன்று 150 சார்ஜிங் மையங்கள் நிகழ் நிதியாண்டில் அமைக்கப்படும் என்றார். 
இந்த பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை தில்லி மின்விநியோக நிறுவனமான பிஎஸ்எஸ் ராஜ்தானி பவர் லிமிடெட்டும், ஜென்ஸோல் சார்ஜ் பிரைவேட் லிமிடெட், டெக்பர்ஸ்பெக்ட் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
இது குறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி கூறுகையில், "இதுபோன்ற 150 சார்ஜிங் மையங்களை உருவாக்க பல்வேறு நிறுவனங்களுடன் ராஜ்தானி பவர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 2019-2010 நிதியாண்டுக்குள் 50 சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்படும். அருகில் உள்ள இதுபோன்ற சார்ஜிங் மையங்களை உப்ங்ஸ்ரீற்ழ்ங்ங்ஊண் என்ற செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். சார்ஜிங் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த செயலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்துக்குத் தேவையான 15 கிலோ வாட் பேட்டரி சார்ஜிங் செய்ய ஒரு மணி நேரம் பிடிக்கும். இதற்காக சுமார் ரூ. 160 முதல் ரூ. 200 வரை வசூலிக்கப்படும். ரூ. 1.60 முதல் ரூ. 1.80 விலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய முடியும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆகியவற்றை விட பேட்டரி வாகனங்களுக்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு. மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடைத் தடுக்க முடியும். 
இந்நிகழ்ச்சியில், கஸ்தூர்பா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் மதன் லால், பிஆர்பிஎல் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அமல் சின்ஹா, பிஎஸ்இஎஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com