மின்வெட்டு, குடிநீர்ப் பற்றாக்குறை: தில்லி காங்கிரஸ் இன்று போராட்டம்

மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் சார்பில் 70 சட்டப்பேரவைத்

மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் சார்பில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடைக் காலத்தில் தில்லியின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கட்சியின் பிரதேச தலைவர் ஷீலா தீட்சித் சந்தித்துப் பேசினார். குறிப்பாக, மின் கட்டணத்தை 6 மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தினார். இருப்பினும், இந்தக் கோரிக்கைகளை தில்லி அரசு ஏற்பதாகத் தெரியவில்லை. 
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தர்னா போராட்டம் நடத்துவதென காங்கிரஸ் கட்சி அண்மையில் முடிவெடுத்தது. இதன்படி, சங்கம் விஹாரில் உள்ள ரதியா மார்கில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித்தும், பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹாரூண் யூசுஃப், நபி கரிம் காவல் நிலையம் அருகிலும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தர்னா போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com