ரூ.15 லட்சம் நகை திருட்டு: இளைஞர் கைது
By DIN | Published On : 24th June 2019 06:58 AM | Last Updated : 24th June 2019 06:58 AM | அ+அ அ- |

புறநகர் தில்லியில் உள்ள தாப்ரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரினுள் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் மடிக் கணினி, ஐ-பேட், செல்லிடப்பேசி, ரொக்கம் ரூ.40,000 ஆகியவற்றை திருடியதாக ராகுல் (32) கைது செய்யப்
பட்டார்.
தில்லி ஜனக்புரியில் மாவட்ட மையத்துக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரின் கதவை உடைத்து இத்திருட்டு நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தாப்ரி பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அன்று இரவு 7 மணியளவில் போலீஸாரிடம் ராகுல் சிக்கினார். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.