தில்லி ஹோட்டலில் தீ விபத்து
By DIN | Published On : 25th June 2019 07:29 AM | Last Updated : 25th June 2019 07:29 AM | அ+அ அ- |

தென்கிழக்கு தில்லி, ஜாமியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:
ஜாமியா நகரில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை பகல் 12.45 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை பகல் 1.25 மணியளவில் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த ஹோட்டலின் தரை தளத்தில் உள்ள சமையலறையில் தீ பற்றியுள்ளது.
இதைத் தொடர்ந்து தீ பரவியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.