குண்டர் சட்டத்தில் மூவர் மீது வழக்கு
By DIN | Published On : 04th March 2019 05:56 AM | Last Updated : 04th March 2019 05:56 AM | அ+அ அ- |

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய அயூப் (42), இந்திரஜித் (38), விஜய் (38) ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களது கடந்த கால குற்ற நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை உயரதிகாரி தெரிவித்தார். பலாத்காரம், பசுவதை, கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டிருந்த இந்த மூவரும், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.