சுடச்சுட

  

  தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் உலக நுகர்வோர் உரிமை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  1963 ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 
  நுகர்வோர் பாதுகாப்பு பற்றியும் உரிமைகள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இத்தினத்தை தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் கொண்டாடும்படி அதன் செயலர் ஆர். ராஜு கூறியதற்கு ஏற்ப, டிடிஇஏ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை  இத் தினம் கொண்டாடப்பட்டது.
  இத்தினம் குறித்தும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும் மாணவர்கள் உரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட  குழந்தைகள் அனைவரையும் டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு  பாராட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai