சுடச்சுட

  

  மயூர் விஹார் ஃபேஸ் 1-ல் சுப சித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: நாளை நடைபெறுகிறது

  By DIN  |   Published on : 16th March 2019 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயூர் விஹார் ஃபேஸ் 1-இல் உள்ள ஸ்ரீ சுபசித்தி விநாயகர் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17-ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  இதையொட்டி, கோயில் வளாகத்தில் ஐந்து கால யாகசாலை பூஜைகள் மார்ச் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை கோ பூஜை,  கஜபூஜை, அஷ்வ பூஜை, தனலட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, சாந்தி ஹோமம் முதலான பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு வேத பாராயணம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. 
  வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை இரண்டாவது யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதேபோன்று, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்றாவது யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
  சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை வேதபாராயணம், நான்காவது யாகசாலை பூஜை,  நவக்கிரக ஹோமம், விஷ்ணு,  தன்வந்திரி, ஹயக்ரீவா, ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு ஆவாரன பூஜையும், ஹோமமும் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை ஐந்தாவது யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளது.
  ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஆறாவது யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.
  மகா கும்பாபிஷேகத்தை ஸ்ரீ ஞானானந்த தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் பிரம்மஸ்ரீ யக்ஞரத்ன தீட்சிதர் மற்றும் வேதவிற்பனர்கள் குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர்.
  இக்கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுப சித்தி விநாயகர் மந்திர் சொஸைட்டியினர் செய்து வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai