துப்பாக்கித் தோட்டா விநியோகம்: ஒருவர் கைது

தில்லி-என்சிஆர் பகுதிகளிலும், பஞ்சாபிலும் கிரிமினல்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை விநியோகித்து வந்ததாக 62 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


தில்லி-என்சிஆர் பகுதிகளிலும், பஞ்சாபிலும் கிரிமினல்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை விநியோகித்து வந்ததாக 62 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம், அபோஹர் பகுதியைச் சேர்ந்த அமர்லால் என்ற அந்த நபர், தில்லியில் சோனியா விஹார் புஷ்டா சாலை அருகே ஏராளமான துப்பாக்கித் தோட்டாக்களுடன் காரில் வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அவர் வந்த காரை சுற்றிவளைத்த போலீஸார், அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பாய்ன்ட் 32 ரக கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய சுமார் 1,000 தோட்டாக்களும், பாய்ன்ட் 315 ரக கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய சுமார் 1,000 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.25,000 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அமர்லால், தில்லியின் படேல் நகர் பகுதியில் தங்கியிருந்து, கிரிமினல்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை விநியோகம் செய்து வந்துள்ளார். ஹரியாணாவின் ஷாபாத் பகுதியிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்களை சட்டவிரோதமாக வாங்கி வந்து, தில்லி, என்சிஆர் பகுதிகளில் விநியோகித்துள்ளார். இதற்காக தில்லியின் படேல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். 
கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டவிரோத செயலில் அவர் ஈடுபட்டு வந்ததும், தில்லி மட்டுமன்றி பஞ்சாபிலும் தோட்டா விநியோகத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், போலி துப்பாக்கி உரிமம் பெற்று தருவதிலும் இவர் உடந்தையாக இருந்துள்ளார். 
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com