தேர்தல் விதிகளை மீறுகிறது ஆம் ஆத்மி: தில்லி தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்

தேர்தல் விதிமுறைகளை ஆம் ஆத்மி கட்சி மீறி வருவதாகக் கூறி தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்வீர் சிங்கிடம் பாஜக  புகார் அளித்துள்ளது. 

தேர்தல் விதிமுறைகளை ஆம் ஆத்மி கட்சி மீறி வருவதாகக் கூறி தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்வீர் சிங்கிடம் பாஜக  புகார் அளித்துள்ளது. 
தில்லி கஷ்மீர் கேட் பகுதியில் தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா, பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் சச்தேவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்தப் புகாரை வெள்ளிக்கிழமை அளித்துள்ளது. 
இது தொடர்பாக விஜேந்தர் குப்தா அளித்த பேட்டி: தில்லியில் உள்ள வாக்காளர்களைத் தொடர்பு கொண்டு, தில்லி வாக்காளர் பட்டியலில் இருந்து 30 லட்சம் பெயர்களை தேர்தல் ஆணையமும், பாஜகவும் கூட்டுச் சேர்ந்து  நீக்கியுள்ளதாக பொய்யான தகவல்களை ஆம் ஆத்மி கட்சி பரப்பி வந்தது.
இதுதொடர்பாக தில்லி தேர்தல் அதிகாரியிடம் சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தோம். அதைத் தொடர்ந்து, தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் வெளியிட்ட  அறிக்கையில், "இந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக தில்லி மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர் பட்டியில் இருந்து பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ தேர்தல் பதிவு அதிகாரியால் மட்டுமே முடியும். பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சில நாள்களாக வாக்காளர்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்த ஆம் ஆத்மியினர் இப்போது மீண்டும் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டோம்.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையம் முன் முறையற்ற வகையில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஐனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட ஆம் ஆத்மிக் கட்சிக் கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com