ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பெண்ணிடம் பணம் மோசடி: இளைஞர் கைது

ஐபிஎஸ் அதிகாரி என பொய் கூறி காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் பணம் பெற்று

ஐபிஎஸ் அதிகாரி என பொய் கூறி காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 28 வயது இளைஞரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் எனப் பொய் கூறி கைதானவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் தெரிவித்ததாவது: 
தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் துறையில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனக்கு தில்லி காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காவல் அதிகாரி ஒருவர் பணம் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தார். 
மேலும், அந்த அதிகாரி தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்றும், தாம் வடக்கு தில்லியில் பணியில் இருப்பதாகவும் கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் அதிகாரி அல்ல என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கிராரியில் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ராஜ் குமார் மல்ஹோத்ரா என்பது தெரிய வந்தது. மேலும், தனது முகநூல் வலைப்பக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராஜ் குமார் பதிவிட்டிருந்ததும் தெரியவந்தது.
கடந்த 2013-இல் இதேபோன்று ராஜ் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். காவலருக்கான தகுதிக்குரிய பெயர் வில்லையை தனது சட்டையில் அவர் அணிந்திருந்தார். ஆனால், உதவி ஆய்வாளரின் சீருடையை அணிந்திருந்தார். இதை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடித்ததால் ராஜ் குமார் மல்ஹோத்ரா கைது செயப்பட்டிருந்தார்.
தற்போது ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதால் ராஜ் குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். எத்தனை பேரிடம் இதுபோன்று ஏமாற்றியுள்ளார் என்பதை அறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com