Enable Javscript for better performance
கடனைத் திருப்பிக் கேட்டவரை கொன்றதாக இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கடனைத் திருப்பிக் கேட்டவரை கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: தில்லி கப்பசேராவைச் சேர்ந்தவர் நிதின் யாதவ் (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் போஜ் நாராயணன். இவரிடம் நிதின் யாதவ் ரூ.30,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதை திருப்பித் தரும்படி போஜ் நாராயணன் வற்புறுத்தி வந்துள்ளார்.
    இந்நிலையில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நிதின் யாதவ் பேசினார். அப்போது, சாலையில் ஒருவர் காயங்களுடன் இருந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கச் செல்வதாகவுக் கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தை பார்த்ததாக நேரில் சாட்சியம் அளிக்க யாரும் முன்விரவில்லை. இந்நிலையில், நிதின் யாதவ் மீண்டும் கட்டுப்பாட்டு அறிக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அந்த நபர் தனக்கு அறிமுகம் ஆனவர் என்றும், அவரை துவாரகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், ஆனால், வரும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாகவும் கூறினார்.
    ஆனால், நிதின் யாதவ் அளித்த தகவல்களுக்கும், ஏற்கெனவே சேகரித்த தகவல்களுக்கும் இடையே முரண்பாடு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் தெற்கு தில்லியில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, போஜன் நாராயணனை, சிறார் ஒருவரின் உதவியுடன் கொலை செய்ததை நிதின் யாதவ் ஒப்புக் கொண்டார்.
     போஜன் நாராயணனிடம் அவர் ரூ.30,000 கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பிக் கேட்ட போது, அவரைக் கொலை செய்ய நிதின் யாதவ் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் இக்கொலைக்கு உதவியாக இருந்த சிறாரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் நிதின் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai