Enable Javscript for better performance
குறைந்தபட்ச வருவாய் திட்டம் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்: ஷீலா தீட்சித் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    குறைந்தபட்ச வருவாய் திட்டம் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்: ஷீலா தீட்சித் உறுதி

    By DIN  |   Published on : 28th March 2019 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குறைந்தபட்ச வருவாய் திட்டம் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என அக்கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் உறுதிபடத் தெரிவித்தார்.
    கட்சியின் பிரதேச அலுவலகமான ராஜீவ் பவனில் கிழக்கு மாநகராட்சிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையப் பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இக்கூட்டத்தில் ஷீலா தீட்சித் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியும், கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்காக கொண்டுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். 
    ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் அளிக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் பலன்களை பிரசாரத்தின் போது விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
    இக்கூட்டத்தில் கட்சியின் தில்லி செயல் தலைவர்கள் ஹாரூண் யூசுஃப், ராஜேஷ் லிலோத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai