தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மக்கள் அவதி

தில்லியில் வெயிலின் தாக்கம் புதன்கிழமையும் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.

தில்லியில் வெயிலின் தாக்கம் புதன்கிழமையும் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
தில்லியில் 10 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.  பகல் வேளையில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால்,  திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும்,  வாகனங்களில் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சாதாரணப் பேருந்துகளில் புழுக்கத்துடன் பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தில்லி  சாலைகளில் நண்பகல் வேளையில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், பழச்சாறு, இளநீர், குளிர்பானங்கள் விற்பனையகங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
தில்லி சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில்  செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 43.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. ஆனால், அதை விஞ்சும் வகையில் பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை  45.3 டிகிரி செல்சியஸாக  பதிவாகியது. 1970, ஏப்ரல் 25-இல் அதிகபட்ச வெப்பநிலை  45.3 டிகிரி செல்சியயாக பதிவாகி இருந்தது.  49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 45.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41.3 டிகிரி செல்சியஸாகவும்  பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 49 சதவீதம்,  மாலை 5.30 மணியளவில் 28 சதவீதம் எனப் பதிவாகி இருந்தது.  வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 24 சதவீதமாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 சதவீதமாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தினர் கூறுகையில், "கிழக்குப் பகுதியில் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், வியாழக்கிழமை முதல் வெப்பநிலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com