விரக்தியில் இருப்பதால் பிரதமரை விமர்சிக்கிறார் ராகுல்: பாஜக

நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்று விரக்தியில் உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர்


நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்று விரக்தியில் உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கிப் பேசுகிறார் என்று பாஜக தெரிவித்தது.
இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறியதாவது:
நாடு முழுவதும் தோல்வி உறுதி என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ந்துவிட்டார். காங்கிரஸ் கோட்டையாக இருந்துவந்த அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளிலும் செல்வாக்கு குறைந்துவருவதை ராகுல் தெரிந்துகொண்டு விட்டார். இதன்காரணமாக, அவர் விரக்தியில் உள்ளார். அமேதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ராகுல் தோல்வியைத் தழுவி விடுவார் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொகுதிகளில் விநியோகிக்கப்பட இருந்த மதுபானங்களும், ஆயுதங்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதமரமாக மோடி மீண்டும் பதவியேற்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ராகுல் தோல்வி பயத்தில் உள்ளார் என்றார் நரசிம்ம ராவ்.
அவரிடம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. தேசப் பாதுகாப்பில் பாஜக அக்கறை செலுத்தி வருகிறது. பிரதமர் மோடி அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் மிகப் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவில்லை' என்று பதிலளித்தார். 
பலம் வாய்ந்த வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்; மற்ற தொகுதிகளில் உள்ள வேட்பாளர்கள் வாக்குகளை பிரிப்பார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்திருந்தார்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com