சிறு, குறு வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும்அஜய் மாக்கன் வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு வணிகர்களின் நலன் பாதுகாக்கப்படும் என அக்கட்சியின்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு வணிகர்களின் நலன் பாதுகாக்கப்படும் என அக்கட்சியின் புது தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஜய் மாக்கன் வாக்குறுதி அளித்தார். 
தில்லி கன்டோன்மெண்ட் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும், மோதி நகரிலும் அஜய் மாக்கன் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். 
பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சிறு, குறு வணிகர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. குறிப்பாக 2006-இல் மேற்கொள்ளப்பட்ட சீலிங் நடவடிக்கையிலிருந்து வணிகர்கள் பாதுகாக்கப்பட்டனர்.  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது, சிறு, குறு வணிகர்களை பாதுகாக்கும் வகையில், தில்லி மாஸ்டர் பிளானில் மட்டும் 170 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
மோடி அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும், மாயாபுரி உள்ளிட்ட வணிகர்கள் மீது தாக்குதல் நடத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு அருகதை இல்லை என்றார் அவர். 
இதேபோல, கிழக்கு தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்அர்விந்தர் சிங் லவ்லி, திரிலோக்புரியிலும், தெற்கு தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜேந்தர் சிங், மெஹரோலி,  ஹர்கேஷ் நகரிலும், வட மேற்கு தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் லிலோத்யா, மங்கோல்புரி, ரோஹிணி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com