முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
ஒருவரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது வழக்கு
By DIN | Published On : 15th May 2019 07:06 AM | Last Updated : 15th May 2019 07:06 AM | அ+அ அ- |

தில்லியின் ஜாமியா நகர் பகுதியில், தனக்கு ஆதரவு தெரிவிக்காத ஒருவரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட நபர் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், ஓக்லா பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.