Enable Javscript for better performance
சூரத் சம்பவம் எதிரொலி: பயிற்சி மையங்களில் உடனடி ஆய்வு நடத்த தீயணைப்புத் துறைக்கு தில்லி அரசு உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சூரத் சம்பவம் எதிரொலி: பயிற்சி மையங்களில் உடனடி ஆய்வு நடத்த தீயணைப்புத் துறைக்கு தில்லி அரசு உத்தரவு

    By DIN  |   Published On : 28th May 2019 07:16 AM  |   Last Updated : 28th May 2019 07:16 AM  |  அ+அ அ-  |  

    குஜராத் மாநிலம், சூரத்தில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள பயிற்சி மையங்களில் தீ பாதுகாப்பு ஆய்வை நடத்துமாறு தீயணைப்புத் துறைக்கு தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
    குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மாடி வர்த்தக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயிற்சி மையத்தில் இருந்த 18 மாணவிகளும், நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய மனித உரிமைகள் கூட்டமைப்பு (யுஎன்ஆர்எஃப் ) தலைவர் சந்தோஷ் பாக்லா கடிதம் எழுதியிருந்தார். அதில், "கடந்த பிப்ரவரியில் தில்லி கரோல் பாகில் ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது, சூரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் அப்பாவி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, இதுபோன்ற சம்பவத்தைத் தடுக்கும் வகையில், வலுவான ஒரு தீ பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்' என கேட்டுக் கொண்டிருந்தது.
    தில்லி தீயணைப்புத் துறையும் தில்லியில் உள்ள பயிற்சி நிறுவனங்களில் விதிகளின்படி தீ தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய தணிக்கை செய்யவும் திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தில்லி தீயணைப்புத் துறைக்கு திங்கள்கிழமை ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
    சூரத் நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தில் 21 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், தில்லியில் பயிற்சி மையங்கள் அமைந்துள்ள அனைத்துக் கட்டடங்களிலும் உடனடியாக ஆய்வு நடத்துமாறு தீயணைப்புப் பணிகள் இயக்குநருக்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், தீ பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் கட்டமாக நான்கு மாடிக்களுக்கு மேல் உயர் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பயிற்சி மையங்களும் தீயணைப்புப் பணிகள் இயக்குநரால் ஆய்வு நடத்தப்பட வேண்டும். நான்கு மாடிகளுக்கு மேல் உள்ள கட்டடங்களில் தீ தடுப்பு விதிகளை மீறிச் செயல்படும் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தில்லி அரசுக்கு உதித் ராஜ் ஆதரவு
    தில்லியில் உள்ள பயிற்சி மையங்களில் சோதனை நடத்த தில்லி அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரான உதித் ராஜ் தெரிவித்துள்ளார். 
    இது தொடர்பாக அவர் கூறுகையில், "சூரத்தில் இருப்பது போன்ற கட்டடங்கள் தில்லியில் அதிகம் உள்ளன. இவற்றில் சோதனை நடத்துவதற்கு தில்லி அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே. இந்த உத்தரவுக்கு இப்போது எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், தீவிபத்து நடந்தால் தில்லி அரசைத்தான் விமர்சிப்பார்கள்' என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp