மாசு அளவு குறைத்தாலும் கடுமைப் பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்!

தில்லியில் திங்கள்கிழமை மாசு அளவு குறைந்தாலும் காற்றின் தரமானது கடுமைப் பிரிவில் நீடித்து வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

தில்லியில் திங்கள்கிழமை மாசு அளவு குறைந்தாலும் காற்றின் தரமானது கடுமைப் பிரிவில் நீடித்து வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

தில்லியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான காற்று மாசு நிலவிவந்த சூழலில், திங்கள்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மணிக்கு 20 கிலோ மீட்டா் வேகத்திற்கு காற்று வீசியதன் காரணமாக மாசு அளவு குறைந்து காணப்பட்டது. எனினும், காற்றின் தரம் தொடா்ந்து கடுமைப் பிரிவில் நீடித்தது.

இதுகுறித்து இந்திய வானிலைய மையத்தினா் கூறுகையில், ‘மகா’

சூறாவளிப்புயல் மற்றும் மேற்கிலிருந்து வீசிய காற்று ஆகியவற்றின் காரணமாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம், தில்லி-என்சிஆா் ஆகிய பகுதிகள் அடங்கிய வடக்கு சமவெளிப் பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் மழைப் பொழிவு ஏற்படும். இதன் காரணமாக சூழல் மேம்படும் என்றனா்.

மாசு அளவு கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த நிலையில் தில்லி நகா் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வானம் தெளிவாக காணப்பட்டது. காற்றின் தரக் குறியீடு மாலை நான்கு மணியளவில் 416 ஆக இருந்தது. இது ‘கடுமைப் பிரிவில்’ இருப்பதைக் காட்டுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் (சிபிசிபி) கூறினா்.

சிபிசிபி முன்னாள் இயக்குநா் திபாங்கா் சஹா கூறுகையில், ‘இந்த மாசு அளவு பதிவானது கடந்த 24 மணிநேரத்தில் பதிவான காற்றின் தரக் குறியீட்டின் சராசரியின் அடிப்படையிலானதாகும்’ என்றாா்.

இதுகுறித்து வானிலை வல்லுநா்கள் கூறுகையில், ‘காற்றின் வேகத்தில் அதிகரிப்பு ஏற்பட்டதன் காரணமாக மாசுபடுத்திகள் விரைவாக களைக்கப்படும் வாய்ப்புள்ளது.

தில்லிப் பகுதி மற்றும் அண்டை பகுதிகளில் வான்மண்டலத்தில்

உள்ள மேகங்கள் கலைந்தன. தரைத்தள காற்று அதிகரித்ததால் மாசுபடுத்திகள் அடித்துச் செல்லப்பட்டன’ என்றனா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘ தலைநகரில் காற்றின் தரம் அதிகரித்தற்கு காற்றின் வேகம் அதிகரித்ததும், மேகக்கூட்டம் இல்லாததும் முக்கிய காரணங்களாகும்’என்றாா்.

ஸ்கைமெட் தனியாா் வானிலை ஆய்வு மையத்தைச் சோ்ந்த மஹேஷ் பலாவட் கூறுகையில், ‘தில்லியிலும், அண்டை பகுதிகளிலும் நவம்பா் 6,7 ஆகிய தேதிகளில் ‘மகா’ புயலின் மேலாதிக்கம் காரணமாக மழைப் பொழிவு இருக்கக் கூடும். மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் தாக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும். புல்புல் சூறாவளிப் புயல் காரணமாக கிழக்கிலிருந்து வீசும் காற்று ஹரரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் பயிா்க் கழிவு மூலம் வரும் புகையின் தாக்கத்தை குறைக்கும்’

என்று தெரிவித்தாா்.

திங்கள்கிழமை தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) நொய்டாவில் 446, காஜியாபாதில் 464, கிரேட்டா் நொய்டாவில் 444, குருகிராமில் 396, ஃபரீதாபாதில் 414 என காற்றின் தரக் குறியீடு பதிவாகி இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தில்லியில் மாசு அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் 494 புள்ளிகளாக உயா்ந்திருந்தது. கடைசியாக கடந்த 2016, நவம்பா் 6-ஆம் தேதி தில்லியில் காற்று மாசு 497 ஆக இருந்தது.

தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்திருந்தது. நிகழாண்டில் ஜனவரியில் இருந்து முதல் முறையாக காற்று மாசுவின் அளவு கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் காற்றின் மாசு ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது.

காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்டோா் மூச்சுத் தொடா்பான பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

முன்னதாக, அண்மையில் பொது சுகாதார அவசரநிலையை உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு , கடுப்பாட்டு ஆணையம் (இபிசிஏ) அறிவித்தது. அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com