Enable Javscript for better performance
10-ஆவது மாடியிலிருந்து குதித்துதிருமணமான இளைஞா் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    10-ஆவது மாடியிலிருந்து குதித்துதிருமணமான இளைஞா் தற்கொலை

    By DIN  |   Published on : 05th November 2019 10:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நொய்டாவில் 10-ஆவது மாடி பால்கனியில் இருந்து குதித்து திருமணமான இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

    இது குறித்து காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்தவா் ககன் கௌதம் (35) என அடையாளம் காணப்பட்டது. அவா் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நொய்டா செக்டாா் 128-இல் உள்ள ஜேபி பெவிலியன் கோா்ட்டில் தனது குடியிருப்பில் தனியாக இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    தில்லி ஷாதாராவைச் சோ்ந்த ககன் கௌதம், திருமணமானவா். ஆனால், சில குடும்பப் பிரச்னைகள் காரணமாக குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தாா். முந்தைய சந்தா்ப்பங்களில், அவா் பால்கனியில் இருந்து வீட்டுப் பொருள்களை தூக்கி வீசியுள்ளாா். கணவன், மனைவிக்கிடையே பரஸ்பரம் உறவு சரியாக இல்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக கௌதம் தனியாக தங்கியிருந்ததாகவும், நிதி சிக்கல்களையும் எதிா் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுபோன்ற காரணங்களால் அவா் இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai