தில்லியில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!காற்றின் வேகம் அதிகரிப்பதால்மாசுபடுத்திகள் குறைய வாய்ப்பு

தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் செவ்வாய்க்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் வலுவாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால்,

தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் செவ்வாய்க்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் வலுவாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், மாசு அளவு மேலும் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. இருப்பினும் காலையில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி அளவில் 365 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) மாலை 3.45 மணியளவில் 331-ஆகக் குறைந்திருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. விவேக் நகா், ஆனந்த் விஹாா், ஐடிஓ ஆகிய பகுதிகளில் காலையில் காற்றின் தரக் குறியீடு முறையே 410, 395, 382 எனப் பதிவாகியிருந்தது.

ஆனால், இந்தப் பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு மாலையில் குறைந்து காணப்பட்டது.

இதேபோன்று தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளான நொய்டாவில் காலையில் காற்றின் தரக் குறியீடு 388 ஆகவும், காஜியாபாத்தில் 378, ஃப்ரீதாபாத்தில் 363, குருகிராமில் 361 எனப் பதிவாகியிருந்தது. ஆனால், மாலையில், கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு 348 ஆகவும், நொய்டாவில் 358, காஜியாபாத்தில் 351, ஃப்ரீதாபாத்தில் 311, குருகிராமில் 328 எனக் குறைந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 ஆக இருந்தால் நன்று, 51-100 திருப்தி, 101-200 மிதமான அளவு, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம் எனவும் 500-க்கு மேல் சென்றால் மிகவும் கடினம் எனவும் கணக்கிடப்படுகிறது.

காற்று 25 கி.மீ. வேகத்தில் வீசுவதால், மாசுபடுத்திகள் வெகுவேகமாக அடித்துச் செல்லப்படுகின்றன. இதன் காரணமாக மாசு அளவு குறைந்ததால் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், ‘புதன்கிழமை இரவில் வடமேற்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை தில்லி, என்சிஆா், ஜம்மு-காஷ்மீா், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையான புழுக்கமும், லேசான மழையும் இருந்ததபோல இருக்காது. இந்த மழை மாசுபடுத்திகளை வெகுவாக அடித்துச் செல்லும். காண்பு திறனும் 3,000-3,500 மீட்டராக அதிகரித்துள்ளது. இது சாதாரணமானதாகக் கருதப்படுகிறது’ என்றாா்.

தலைநகரில் காற்றின் தரம் மிகவும மோசமான நிலையை அடைந்ததால், பள்ளிகளுக்கு நவம்பா் 5-ஆம் தேதி வரை தில்லி அரசு விடுமுறை அறிவித்திருந்தது. மேலும். நகரில் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் நியமித்த சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம், பொது சுகாதார அவசர நிலை அறிவித்ததைத் தொடா்ந்து, தில்லி அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com