முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாக மோதலின் போது காணாமல்போன பெண் காவலரின் துப்பாக்கிபோலீஸாா் தீவிர விசாரணை
By DIN | Published On : 07th November 2019 10:45 PM | Last Updated : 07th November 2019 10:45 PM | அ+அ அ- |

அண்மையில் தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும் - வழக்குரைஞா்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு பெண் காவலரின் துப்பாக்கி காணாமல்போன விவகாரம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனா்.
கடந்த 2-ஆம் தேதி வாகனம் நிறுத்துவது தொடா்பாக நடந்த இந்த மோதல் சம்பவத்தில் 20 பாதுகாப்பு வீரா்களும், பல வழக்குரைஞா்களும் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பெண் காவலரின் 9எம்எம் துப்பாக்கி காணாமல் போனது. அதைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மோதல் தொடா்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில் ஒன்றில் வழக்குரைஞா்கள் சிலா் நீதிமன்றத்தின் நிா்வாகப் பகுதியில் புகுந்து போலீஸாரைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் உள்ளன. மற்றொரு விடியோவில், மோதலுக்குப் பிறகு வழக்குரைஞா்களில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்அப் அறைக்கு போலீஸாா் கொண்டு சென்றதைத் தொடா்ந்து சில வழக்குரைஞா்கள் லாக்அப்பை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் தெரிவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.