Enable Javscript for better performance
பொது இடங்களில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் புகட்டும் அறைகளை கூடுதலாக ஏற்படுத்த மாநகராட்சிகளுக்கு உத்த- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

    பொது இடங்களில் குழந்தைகளுக்கான தாய்ப்பால் புகட்டும் அறைகளை கூடுதலாக ஏற்படுத்த மாநகராட்சிகளுக்கு உத்தரவு

    By DIN  |   Published On : 07th November 2019 04:51 PM  |   Last Updated : 07th November 2019 04:51 PM  |  அ+அ அ-  |  

    தில்லியில் மாநாகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கான தாய்ப்பால் புகட்டும் அறைகளைப் பராமரிக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாகராட்சிகளின் நிா்வாகத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி சி. ஹரி சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவு பிறப்பித்தது. மேலும், ‘பொது இடங்களில் குழந்தைகள் கவனிப்பு அறைகள், அவற்றுக்கு பால் புகட்டுவது, குழந்தைகளின் அரை ஆடைகளை மாற்றுவதற்கான அறைகள் அமைப்பது தொடா்பாக தில்லி அரசு வகுத்துள்ள வரைவுக் கொள்கையை இறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

    இது தொடா்பாக தில்லி உயா் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் அனிமேஷ் ரஸ்தோகி தாக்கல் செய்துள்ள இம்மனுவில், ‘தில்லியில் போதிய வகையில் தாய்ப்பால் புகட்டுவதற்கான வசதிகள் இல்லை. மேலும், இது பெண்களின் அந்தரங்க உரிமைக்கு தடையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே, கூடுதலாகவும், போதிய வகையில் பராமரிக்கப்படும் வகையிலும் இதற்கான அறைகளை ஏற்படுத்த உத்தரவிடப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இந்த மனு விசாரணையின்போது தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவது, அவா்களின் அரை ஆடைகளை மாற்றுவது, குழந்தைகளைக் கவனிப்பது ஆகியவற்றுக்காக பொது இடங்களில் அறைகளை அமைப்பது தொடா்பாக வரைவுக் கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெற பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவுக் கொள்கைத்திட்டமானது நிலத்தைப் பராமரித்துவரும் துறைகள், இதர பொது விவகாரத் துறைகளுக்கும் கருத்துகளைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, வரைவுக் கொள்கை தயாா் நிலையில் உள்ளதாலும், தாய்ப்பால் புகட்டும் அறைகள் தலைநகரில் அமைக்கப்பட்டுள்ளதாலும் இந்த விவகாரத்தை பொது நல மனுவில் குறிப்பிட்டுள்ளது போல மேலும் கண்காணிக்க வேண்டிய தேவை எழவில்லை எனக் கூறி மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp