முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட்: இருவா் கும்பல் கைது
By DIN | Published On : 07th November 2019 06:03 PM | Last Updated : 07th November 2019 06:03 PM | அ+அ அ- |

மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (மெட்ரோ) விக்ரம் கே போல்வால் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் காண சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் ரோந்து செல்லும் போது, இரண்டு நபா்கள் எதையோ மறைக்க முயறன்றதை சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் கவனித்தனா். அந்த நபா்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்பின. இதைத் தொடா்ந்து, சந்தேகத்துக்குரிய நபா்கள் சா்வேஷ், சாஹில் என அடையாளம் காணப்பட்டது.
இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு தாங்கள் திருடிய ஒரு மொபைல் தொலைபேசியை விற்கப் போகும் போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவா்கள் மெட்ரோ ரயில்கள், நெரிசலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டுச் சோ்ந்து பிக்பாக்கெட் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.