முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
விஜய் கோயல் பேரணி செய்திக்கு பெட்டியாகப் போட்டுக் கொள்ளவும்- விஜய் கோயல் மீது முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய வேண்டும்: ஆம் ஆத்மி
By DIN | Published On : 07th November 2019 10:44 PM | Last Updated : 07th November 2019 10:44 PM | அ+அ அ- |

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மீறிய மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெறும் நாடகமே எனக் கூறி அத்திட்டத்தை விஜய் கோயல் கடந்த திங்கள்கிழமை மீறினாா். தில்லி சாலையில் திங்கள்கிழமை இரட்டைப் படை இலக்க பதிவெண் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒற்றைப்படை இலக்கத்தில் (2727) முடிவடையும் தனது காரில் அவா் சாலையில் சென்றாா். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினா் அவருக்கு ரூ.4,000 அபராதம் விதித்தனா். இந்நிலையில், வெறும் அபராதத்துடன் அவரை விடுவித்தது தவறு என்றும் அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் நிலவும் காற்று மாசு தொடா்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ள அறிக்கையில், தில்லியில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்க பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரித்தலே காரணம் எனக் கூறியுள்ளது. இந்நிலையில், தில்லியில் காற்று மாசு அதிகரிக்க தில்லியின் உள்ளகக் கராணிகளே காரணம் என்ற தில்லி பாஜகவின் பிரசாரம் பொய்யானது என மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தத் தவறான பிரசாரத்துக்காக தில்லி மக்களிடம் பாஜக மன்னிப்புக் கோர வேண்டும். மேலும், தில்லி அரசு அமல்படுத்தியுள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறாா்கள். இந்நிலையில், இத்திட்டத்தைக் குழப்பும் வகையில் நடந்து கொண்ட பாஜக எம்பி விஜய் கோயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், சட்டம் ஒழுங்கு மீது மக்களுக்கு மரியாதை பிறக்கும் என்றாா் அவா்.