Enable Javscript for better performance
கர்தார்பூர் செல்ல  இலவச திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்: தில்லி முதல்வர் கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    கர்தார்பூர் செல்ல  இலவச திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்: தில்லி முதல்வர் கேஜரிவால்

    By DIN  |   Published on : 09th November 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kejriwal

    நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனா திட்டத்தின் கீழ் முதியவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
    தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கேஜரிவால் கூறுகையில், "முக்கிய மந்திரி தீர்த்த யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 12 இடங்களுக்கு தீர்த்த யாத்திரைக்காக தில்லியில் உள்ள முதியவர்களை அழைத்துச் செல்கிறோம். மேலும், பாகிஸ்தான் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கும் யாத்திரைக்காக முதியவர்களை அழைத்து செல்ல பூர்வாங்க முடிவெடுத்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு ஏற்கும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai