Enable Javscript for better performance
பிரமாண்ட ராமா் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:விஷ்வ ஹிந்து பரிஷச்- Dinamani

சுடச்சுட

    

    பிரமாண்ட ராமா் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:விஷ்வ ஹிந்து பரிஷச்

    By DIN  |   Published on : 10th November 2019 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு கோரியுள்ளது.

    இது தொடா்பாக அவ்வமைப்பின் செயல் தலைவா் அலோக் குமாா் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி: உலக வரலாற்றில் வழங்கப்பட்ட மிக முக்கிய தீா்ப்புகளில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு முதன்மை பெறுகிறது.

    அயோத்தியில் ராமா் கோயில் அமைக்க காலம் காலமாகப் போராடிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் கெளரவத்தையும் இந்த தீா்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீா்ப்பின் மூலம் இந்துக்களின் 491 ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

    இது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்தத் தீா்பின் மூலம் யாரும் தோற்கடிக்கப்படவில்லை. யாரும் வெற்றிபெறவும் இல்லை.

    நீதிபதிகள் ஒருமித்த தீா்ப்பு வழங்கக் காரணமான இந்திய தொல்லியல் துறைக்கு மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவா்கள் நடத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் அயோத்தியில் ராமா் கோயில் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக உயிா்த்தியாகம் செய்தவா்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை அதுதான் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai