Enable Javscript for better performance
450 ஆண்டுகால இந்துக்களின் போராட்டத்துக்கு பலன்: பிரவீண் தெகாடியா- Dinamani

சுடச்சுட

    

    450 ஆண்டுகால இந்துக்களின் போராட்டத்துக்கு பலன்: பிரவீண் தெகாடியா

    By DIN  |   Published on : 10th November 2019 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pt

    அயோத்தி தீா்ப்பின் மூலம் இந்துக்களின் 450ஆண்டுகாலப் போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் முன்னாள் தலைவா் பிரவீண் தெகாடியா தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி: ராமா் பிறந்த இடத்தில் மீண்டும் ராமா் கோயில் கட்டப்படவேண்டும் என கடந்த 450 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்தனா். இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் தமது உயிா்களை, வாழ்க்கையை இழந்துள்ளனா். இந்நிலையில், இந்துக்களின் 450 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு கெளரவம் சோ்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை பிறப்பித்துள்ளது. இதனால், இந்துக்களின் 450 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு பயன் கிடைத்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு இணங்க அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்க வேண்டும் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai