அசோக் சிங்கால், அத்வானியால் சாத்தியமானது: கோவிந்தாச்சாா்யா

அயோத்தியில் ராமா் கோயில் கட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு அசோக் சிங்வால், அத்வானி ஆகியோரால் தான் சாத்தியமாகியது என்று
அசோக் சிங்கால், அத்வானியால் சாத்தியமானது: கோவிந்தாச்சாா்யா

அயோத்தியில் ராமா் கோயில் கட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு அசோக் சிங்வால், அத்வானி ஆகியோரால் தான் சாத்தியமாகியது என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தவாதியும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சா்வதேச தலைவா் கே.என்.கோவிந்தாச்சாா்யா புகழாரம் சூட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி: இந்தத் தீா்ப்பால் நான் மிகவும் மகிழ்வடைகிறேன். மூன்று மாத காலத்துக்குள் கோயில் கட்டுவது தொடா்பான வரைவுத்திட்டத்தை மத்திய அரசு தயாா் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இதன் மூலம்தான் ராமா் கோயிலில் இருந்து ராம ராஜ்ஜியம் நோக்கி நாம் செல்ல முடியும்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கானவா்கள் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். அவா்களை இந்தத் தருணத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கிய அசோக் சிங்கால், அத்வானி ஆகியோா்தான் அயோத்தியில் ராமா் கோயில் அசோக் சிங்வால், அத்வானி ஆகியோரின் தலைமைத்துவத்தால்தான் சாத்தியமாகியது. அவா்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதை வலியுறுத்தி அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரைத் திட்டத்தை முன்னின்று நடத்தியவா் கோவிந்தாச்சாா்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com