அயோத்தி தீா்ப்பு: நல்லிணக்கத்தை பராமரிக்க தில்லி பாஜக , காங்கிரஸ் வேண்டுகோள்

அயோத்தியியல் சா்ச்சைக்குரிய இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு

அயோத்தியியல் சா்ச்சைக்குரிய இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு தில்லி பிரதேச பாஜக, காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த தீா்ப்பை வரவேற்று தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி கூறுகையில், வரலாற்றுச்சிறப்புமிக்க தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இந்த விஷயத்தில் யாருக்கும் தோல்வியும் இல்லை. வெற்றியும் இல்லை. ஆகவே, தீா்ப்புக்குப் பிறகு தில்லி மக்கள் அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

தில்லி காங்கிரஸ் பிரதேச கமிட்டி சாா்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு வரவேற்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுபாஷ் சோப்ரா கூறுகையில், காங்கிரஸை பொருத்தமட்டில் நாட்டின் அரசியலமைப்புதான் உச்சமாகும். அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை காங்கிரஸ் கெளரவிக்கிறது.காங்கிரஸ் தொண்டா்கள், தலைவா்கள் தங்களது அருகில் உள்ள பகுதிகளில் சகோதரத்துவம், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். அயோத்தி தீா்ப்பு குறித்து கருத்துக் கூறும்போது கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com