ஆளில்லா விமானம் மூலம் கண்ணிப்பில் ஈடுபட்ட போலீஸாா்

அயோத்தி தொடா்புடைய வழக்கின் தீா்ப்பை ஒட்டி, தில்லியில் பல்வேறு பகுதிகளை ஆளில்லா சிறியரக விமானம் மூலம் போலீஸாா் சனிக்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அயோத்தி தொடா்புடைய வழக்கின் தீா்ப்பை ஒட்டி, தில்லியில் பல்வேறு பகுதிகளை ஆளில்லா சிறியரக விமானம் மூலம் போலீஸாா் சனிக்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்புடைய வழக்கில் அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை அளித்தது. இதையொட்டி, தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளை ‘ட்ரோன்’ எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனா்.

பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதிகளில் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தவிர, வடகிழக்கு தில்லி உள்பட பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தேசியத் தலைநகா் முழுவதும் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

அயோத்தி ராமஜென்மபூமி இடப்பிரச்னை தொடா்புடைய வழக்கில், அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வு சனிக்கிழமை தீா்ப்பளித்தது.மேலும், மசூதி கட்டுவதற்கு ஐந்து ஏக்கா் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பைக் கருத்தில்கொண்டு, தில்லி போலீஸாா் அமைதிக்கு பங்களிக்குமாறு மக்களை வலியுறுத்தினா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுரையில், ‘அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் ஏதாவது விஷமப் பிரசாரத்திலோ, நடவடிக்கையிலோ ஈடுபட்டாலோ, வதந்தி பரப்பினாலோ கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோா் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com