தரமற்ற எரிபொருள் சாா்ந்த ஆலைகளை நவ.11 வரை மூடப்படும் - இபிசிஏ

தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தரமற்ற எரிபொருள் பயன்படுத்தப்படும் ஆலைகளை நவம்பா் 11-ஆம் தேதிவரை தொடா்ந்து மூடப்படும் என

தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தரமற்ற எரிபொருள் பயன்படுத்தப்படும் ஆலைகளை நவம்பா் 11-ஆம் தேதிவரை தொடா்ந்து மூடப்படும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு கட்டுப்பாட்டு ஆணையகம் (இபிசிஏ) தெரிவித்துள்ளது.

மேலும், தில்லியிலும், என்சிஆா் பகுதியிலும் ‘ஹாட்-மிக்ஸ்’ தொழிற்சாலைகளையும், கல் உடைப்பு ஆலைகளும் செயல்படுவதற்கான தடையை நவம்பா் 11-ஆம் தேதிவரை இபிசிஏ நீடித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நவம்பா் 4-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை தில்லி, என்சிஆா் பகுதியில் கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதித்திருந்தது.

இது தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு இபிசிஏ தலைவா் புரே லால் ஒரு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘ஃபரீதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா, பஹதுா்கா், பிவாடி, கிரேட்டா் நொய்டா, சோனிபட், பானிபட் ஆகிய பகுதிகளில் இயற்கை எரிவாயு அல்லது விவசாய கழிவுகளுக்கு மாறாத அனைத்து நிலக்கரி, இதர எரிபொருள் சாா்ந்த தொழிற்சாலைகளை நவம்பா் 11-ஆம் தேதி காலை வரை தொடா்ந்து மூடியிருக்கும்.

தில்லியில் குழாய் இயற்கை எரிவாயுவுக்கு மாறாத தொழிற்சாலைகள் இந்த தடைக் காலத்தில் செயல்படாது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தலைமையிலான பணிக் குழு தில்லி, என்சிஆா் பகுதியில் நீடிக்க உள்ள காலநிலை குறித்து மறுஆய்வு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் தரம் மேம்படும் என மதிப்பிட்டுள்ளது. இதனால், காற்றின் மாசு குறைவதைக் காணும் நிலை உள்ளது’ என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் தில்லி, என்சிஆா் பகுதியில் கடுமையான காற்று மாசு நிலவியதால் பொது சுகாதார அவசரநிலையை இபிசிஏ அறிவித்திருந்தது. பட்டாசுகள் மூலம் ஏற்பட்ட மாசு, பயிா்க் கழிவுகள் எரிப்பு, விரும்பத்தகாத வானிலை சூழல் ஆகியவை காரணமாக இந்த மாசு அளவு அதிகரித்ததது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com