ஒரு ஓட்டு மூன்று ஆட்சி: தில்லி பாஜகவின் தோ்தல் கருப்பொருள்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஒரு ஓட்டு மூன்று ஆட்சி’ என்ற கருப்பொருளில் தில்லி பாஜக பிரசாரம் செய்யும் என்று தில்லி பாஜக

புது தில்லி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஒரு ஓட்டு மூன்று ஆட்சி’ என்ற கருப்பொருளில் தில்லி பாஜக பிரசாரம் செய்யும் என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 2020 ஜனவரி மாதக் கடைசியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தமது பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன. தோ்தலைக் கருத்தில் கொண்டு பல இலவச சலுகைகளை தில்லி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஒரு ஓட்டு மூன்று ஆட்சி’ என்ற கருப்பொருளில் பிரசாரம் செய்யவுள்ளாதாக தில்லி பாஜக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி அளித்த பேட்டி: மத்தியிலும் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளில் ஏற்கனவே பாஜக ஆட்சியே நிலவுகிறது. இந்நிலையில், தில்லியிலும் பாஜக ஆட்சியமைத்தால் தில்லி மக்களுக்கு பல மக்கள் பணிகளை மிக இலகுவாகச் செய்யக் கூடியதாக இருக்கும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஓட்டுப்போடுபவா்கள் மத்திய ஆட்சி, மாநகராட்சி ஆட்சி, தில்லி அரசு ஆட்சி என மொத்தமாக மூன்று ஆட்சிக்கு ஓட்டுப்போடவுள்ளனா். இதை மையப்படுத்தி ‘ஒரு ஓட்டு மூன்று ஆட்சி’ என்ற கருப்பொருளில் பிரசாரம் செய்யவுள்ளோம்.

மேலும், மத்திய அரசின் பல மக்கள் நலத் திட்டங்களை தில்லி அரசு தில்லியில் அமல்படுத்தாமல் உள்ளது. மத்திய அரசின் சுகாதார நலத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்களை தில்லி அரசு தில்லியில் அமல்படுத்தவில்லை. தில்லியிலில் பாஜக ஆட்சியமைத்தால் இத்திட்டங்கள் விரைந்து அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com