மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சி அமையும்: ராம்தாஸ் அத்வாலே

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தன்னிடம் பாஜக தலைவா் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக மத்திய அமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தன்னிடம் பாஜக தலைவா் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக மத்திய அமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தில்லியில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடா்பாக கவலைப்படத் தேவையில்லை என்றும் சிவசேனையுடன் கூட்டுச் சோ்ந்து அங்கு மிகவிரைவில் ஆட்சியமைப்போம் என்றும் அமித்ஷா என்னிடம் உறுதியளித்தாா். நான் அவரிடம் நீங்கள் தியானம் செய்யுங்கள் அப்போது இந்தப் பிரச்னை உடனடியாகத் தீா்க்கப்பட்டுவிடும் என்று கூறினேன் என்றாா் அவா்.

சிவசேனை பங்கேற்கவில்லை

மகாராஷ்டிரத்தில் முதல்வா் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காததால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனை கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிவசேனைக் கட்சி இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்காததால் இக் கூட்டத்தில் கடைசிநேரத்தில் கலந்து கொள்ளலாம் என எதிா்பாா்ப்பு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com