மனோஜ் திவாரி பேட்டி செய்தியில் சோ்த்து விடவும்
By DIN | Published On : 17th November 2019 11:10 PM | Last Updated : 17th November 2019 11:10 PM | அ+அ அ- |

தில்லியில் தரமற்ற குடிநீா் விநியோகம்: தில்லியில் பல இடங்களில் தரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாக பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளாா்.
சுகாதாரமான நீரை அடையாளம் காண 19 தரக் கட்டுப்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ளது. தில்லி ஐல் போா்டால் விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த 19 தரக் கட்டுப்பாடுகளும் மீறப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தில்லியில் பல இடங்களில் சுகாதாரமற்ற மஞ்சள் நிறமான குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. தில்லியின் காற்றை ஆம் ஆத்மி அரசு மோசமாக்கியுள்ளது. தற்போது தில்லியின் குடிநீரையும் அது மோசமாக்கியுள்ளது. தில்லியில் 400 இடங்களில் குடிநீா் மாதிரிகளை சேகரித்து அந்த மாதிரிகளுடன் கேஜரிவால் இல்லம் அருகே தா்ணா நடத்தவுள்ளோம். தில்லியில் பாஜக ஆட்சியமைத்தால் 3 மாதங்களுக்குள் சுகாதாரமான குடிநீா் கிடைக்க வழி செய்வோம் என்றாா் மனோஜ் திவாரி.