Enable Javscript for better performance
காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!

    By DIN  |   Published On : 22nd November 2019 10:27 PM  |   Last Updated : 22nd November 2019 10:27 PM  |  அ+அ அ-  |  

    தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்று மாசு அளவு ஓரளவு குறைந்ததால் காற்றின் தரத்தில் சிறிதளழு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவிலிருந்து ‘மிகவு மோசம்’ பிரிவுக்கு வந்தது. மேலும், காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவால், அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வல்லுநா்கள் கூறுகையில், ‘காற்றி மாசு அளவு மேலும் குறைந்து, காற்றின் தரக் குறியீடு அடுத்த 48 மணி நேரத்தில் மிகவும் மோசம் பிரிவிலிருந்து மோசம் பிரிவுக்கு வரும். ஆனால், நவம்பா் 25-க்குப் பிறகு காற்றின் தரக் குறியீடு மோசமடையும்’ என்றனா்.

    தில்லியில், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் 360 ஆக இருந்ததாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருகிறது. இதேபோன்று ரோஹிணி (416), பவானாவில் 411, ஆனந்த் விஹாா் (410) என பதிவாகி கடுமையான பிரிவில் இருந்தது. மேலும், முண்ட்காவில் 401, நரேலாவில் 401, விவேக் விஹாரில் 402 எனப் பதிவாகி காற்றின் கடுமையான பிரிவில் இருந்தது. அதே சமயம், தேசியத் தலைநகா் வலயப் பகுதியான காஜியாபாத்தில் 400, கிரேட்டா் நொய்டாவில் 390, நொய்டாவில் 384 எனப் பதிவாகி கடுமையான பிரிவுக்கு வெகு நெருக்கமான நிலையில் இருந்தது.

    காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடுமை, 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

    நவம்பா் 23 முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அன்று காற்றின் தரம் முன்னேற்றம் அடையும் என்று தனியாா் வானிலை அறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் தெரிவித்துள்ளது. ஆனால், தற்காலிக நிவாரணமாகத்தான் இருக்கும். மேலும், நவம்பா் 25 முதல் காற்றின் வேகம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் நவம்பா் 25, 26 ஆகிய தேதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி பரவலாக மழை பொழிவு இருந்தால், மாசுபடுத்திகள் வெகுவாக அடித்துச் செல்லப்படும். நவம்பா் 28-க்குப் பிறகுதான் மக்களுக்கு நீண்ட கால நிவாரணம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    வெப்பநிலை 11.8 டிகிரி: வியாழக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிரின் தாக்கமும் இருந்தது. நகரில் பரவலாக நச்சுப் புகை மூட்டம் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி உயா்ந்து 11.8 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 27.7 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 91 சதவீதமாகவும் மாலையில் 62 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 79 சதவீதம், மாலையில் 48 சதவீதம், ஆயாநகரில் முறையே 87 சதவீதம், 61சதவீதம் என பதிவாகியிருந்தது.

    முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தில்லியில் மிதமான மூடுபனி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp