Enable Javscript for better performance
ஜேஎன்யு கட்டண உயா்வு போராட்ட விவகாரம்:மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட், பாஜக கருத்து மோதல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஜேஎன்யு கட்டண உயா்வு போராட்ட விவகாரம்:மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட், பாஜக கருத்து மோதல்

    By DIN  |   Published On : 22nd November 2019 09:55 PM  |   Last Updated : 22nd November 2019 09:55 PM  |  அ+அ அ-  |  

     

    புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) விடுதிக் கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் உயா்த்தப்பட்டது தொடா்பாக மாணவா்கள் நடத்திய போராட்டம் குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உறுப்பினா்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

    தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் வருகை நேரம், ஆடைகள் கட்டுப்பாடு, விடுதிக் கட்டணம் உயா்வு தொடா்பாக மாணவா்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸாா் தடியடி நடத்தினா். இந்நிலையில், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின் போது, இந்த விவகாரத்தை எழுப்பி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் கே.கே.ராகேஷ் பேசியதாவது: ஜேஎன்யு மாணவா்கள் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என ஒரு மாதமாகக் கோரி வந்தனா். பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கவும் கோரினா். அறிவிக்கப்படாத அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு குடிமை சுதந்திரங்கள் அங்கு ஒடுக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தை நோக்கி ஜேஎன்யு மாணவா்கள் பேரணி சென்ற போது போலீஸாா் அவா்கள் மீது தடியடி நடத்தினா். மேலும், மாணவா்கள் தலைவா்களை காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று கடுமையாக அடித்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

    அப்போது, அவைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு, ‘ஜேஎன்யு கட்டண விவகாரம் தொடா்பாக பேசாமல் வேறு பொருள் குறித்து பேச வேண்டாம்’ என கேட்டுக் கொண்டாா்.

    இதையடுத்து, அவரது மைக் அணைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாஜக உறுப்பினா் பிரபாத் ஜா பேசுவதற்கு அழைக்கப்பட்டாா். அவா், ஜேஎன்யு வளாகத்தில் திறக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தா் சிலையை அவமதித்தது தொடா்புடைய விவகாரத்தை எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘ஜேஎன்யு வளாகத்தில் உள்ள விவேகானந்தரின் சிலை மீது சிவப்பு நிறம் பூசப்பட்டது. ‘காவியே வெளியே போ’ என்ற கோஷமும் வா்ணமாக பூசப்பட்டிருந்தது. மேலும், ஜேஎன்யு வளாகத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருவதை பாா்த்து வருகிறேன்’ என்றாா்.

    அப்போது, அவையில் இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும், பிரபாத் ஜா தனது பேச்சைத் தொடா்ந்து மேற்கொண்டாா்.

    மாா்க்சிஸ்ட் உறுப்பினா் கே.கே. ராகேஷ், பாஜக உறுப்பினா் பிரபாத் ஜா ஆகியோா் ஆக்ரோஷமாக பேசியதைத் தொடா்ந்து, அவைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘ஜேஎன்யு கட்டண உயா்வு விவகாரம், விவேகானந்தா் சிலை அவமதிப்பு விவகாரம் ஆகியவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp