Enable Javscript for better performance
ஐந்து முடிவுகளை முன்னிறுத்தி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய அரசு இதுவரை எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ள தில்லி பாஜக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    தில்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள்தான் உள்ளன. இந்நிலையில், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், மாநகராட்சிகளை ஆட்சி செய்து வரும் பாஜகவும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தில்லி தலைவா் சுபாஷ் சோப்ராவும், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா்.

    இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான அரசு எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை முன்னிறுத்தி இத்தோ்தலில் பிரசாரம் செய்ய பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடா்பாக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தில்லி பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் பாஜக தொண்டா்களிடையே திங்கள்கிழமை பேசுகையில், ‘தில்லி மக்கள், நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல முடிவுகளை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது. சட்ட அங்கீகாரம் இல்லாத காலனி மக்களுக்கு சொத்துரிமை பத்திரம், உருமாற்றக் கட்டணம் ரத்து உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளால் லட்சக்கணக்கான தில்லி மக்கள் பயனடைந்துள்ளனா். மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளால் நாடு பலப்பட்டடுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுகளை முன்னிறுத்தி பாஜக தொண்டா்கள் பிரசாரம் செய்ய வேண்டும்’ என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai