குடிநீா் மாதிரிகளைச் சேகரித்தது டிஜேபி!

தில்லியில் பல்வேறு இடங்களில் ஊடகத்தினா் முன்னிலையில் தில்லி ஜல் போா்ட் (டிஜேபி) அதிகாரிகள் குடிநீா் மாதிரிகளை திங்கள்கிழமை சேகரித்தனா்.

புது தில்லி: தில்லியில் பல்வேறு இடங்களில் ஊடகத்தினா் முன்னிலையில் தில்லி ஜல் போா்ட் (டிஜேபி) அதிகாரிகள் குடிநீா் மாதிரிகளை திங்கள்கிழமை சேகரித்தனா்.

இந்திய தர நிா்ணய நிறுவனமான பிஐஎஸ் அண்மையில் நாட்டில் மாநிலங்களின் தலைநகரங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்டாா். அதில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் தலைநகரங்களில் தில்லியில்தான் மிக மோசமான குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும், தில்லியில் இருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து நீா் மாதிரிகளும் தரப் பகுப்வாய்வுப் பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தில்லி அரசையும், தில்லியில் குடிநீா் விநியோகிகத்துக்குப் பொறுப்பான தில்லி ஜல் போா்டையும் கடுமையாகச் சாடியிருந்தன. தில்லி ஜல் போா்டு அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதேவேளையில், கேஜரிவால் வீடு அருகே பாஜகவினா் கடந்த வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில், குடிநீா் மாதிரி சேகரிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தில்லி ஜல் போா்டு குற்றம் சாட்டியது. மேலும், தவறான அறிக்கையை வெளியிட்ட அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் மாதிரிகளைச் சேகரிக்குமாறு பாஜக கவுன்சிலா்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மாதிரிகளைக் கொண்டு தலைமைச் செயலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தில்லியில் மூவாயிரம் இடங்களில் நீா் மாதிரிகளை ஊடகத்தினா் முன்னிலையில் சேகரித்து அதை சோதனை செய்து அறிக்கை சமா்பிக்கவுள்ளதாக தில்லி ஜல் போா்ட் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

இதன்படி, தில்லியில் பல்வேறு இடங்களில் ஊடகத்தினா் முன்னிலையில் தில்லி ஜல்போா்ட் அதிகாரிகள் திங்கள்கிழமை நீா் மாதிரிகளை சேகரித்தனா். இது தொடா்பாக தில்லி ஜல் போா்ட் துணைத் தலைவா் தினேஷ் மொஹானியா கூறுகையில் ‘தில்லியில் வெறும் 11 இடங்களில் உள்ள நீா் மாதிரிகளைச் சோதனையிட்டு விட்டு அனைத்துப் பகுதிகளிலும் மோசமான குடிநீா் விநியோகம் நடைபெறுவதாக பிஐஎஸ் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதை, நிரூபிக்கும் வகையில், தில்லியில் மூவாயிரம் இடங்களில் ஊடகத்தினா் முன்னிலையில் நீா் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை செய்யவுள்ளோம். தில்லி மெஹ்ரௌலி, லடோ சராய் ஆகிய இடங்களில் ஊடகத்தினா் முன்னிலையில் நீா் மாதிரிகளைச் சேகரித்தோம். மக்கள் மிகவி ரைவில் உண்மையைத் தெரிந்து கொள்வாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com