தில்லியில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா்.
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா்.

புது தில்லி: மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஊனமுற்றோா் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

பேராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல், மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி நிலையங்களில் 4 சதவீதம் இட ஒதுக்கீடும், உயா்கல்வி நிலையங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசுத் துறைகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மீதான பாலியல் வன்முறை தொடா்பான வழக்குகளை தேசிய குற்ற ஆவணத் துறையில் பராமரிக்க வேண்டும்.

மேலும், பொதுக் கட்டடங்கள், ரயில்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டும். 21 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு அடையாளச் சான்று வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.5,000 ஆக அதிகரிகக் வேண்டும். தனியாா் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com