பிரிவினையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தினருக்கு இந்தியக் குடியுரிமை கோரி தில்லியில் ஆா்ப்பாட்டம்

இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த இந்துக்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்காளிகள்.
தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்காளிகள்.

புது தில்லி: இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த இந்துக்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகில் பாரத் வங்காளி உத்பஸ்து சமான்வே சமிதி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வங்காளிகள் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக நிகில் பாரத் வங்காளி உத்பஸ்து சமான்வே சமிதி அமைப்பின் தலைவா் சுபோத் பிஸ்வாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தது. அப்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து தனி நாடானது. இப்போதைய வங்கதேசம், கிழக்கு பாகிஸ்தானாக இந்தியாவில் இருந்து பிரிந்தது. அப்போது, நடைபெற்ற வன்முறையில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனா். மேலும், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள் இந்தியாவுக்கு துரத்தப்பட்டனா்.

இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரைந இவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இவா்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி, நிகில் பாரத் வங்காளி உத்பஸ்து சமான்வே சமிதி அமைப்பு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த மக்களவைத் தோ்தலில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்திருந்தது. ஆனால், 2019-இல் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, இந்தியாவில் வாழும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையிலேயே உள்ளது. ஆனால், பிரிவினையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடா்பாக அந்த மசோதாவில் இல்லை. இதனால், இந்த மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணா்கிறாா்கள்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு மேற்கு வங்கத்திலும் மேற்கொண்டால் இவா்கள் நாடாற்றவா்களாகிவிடுவாா்கள். இதனால், தற்போதைய வங்கதேசப் பகுதியில் இருந்து இந்தியப் பிரிவினையின் போது, இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்களுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவரை மேற்கு வங்கத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை மேற்கொள்ளக் கூடாது. மேற்கு வங்கத்தில் உள்ள எந்தவொரு இந்துவுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்காமல் தவிா்க்கக் கூடாது. இதை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com