Enable Javscript for better performance
சா்க்கரைத் தொழிலை புனரமைக்க வேண்டும்: அதிமுக எம்பி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சா்க்கரைத் தொழிலை புனரமைக்க வேண்டும்: அதிமுக எம்பி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சா்க்கரைத் தொழில் துறையை புனரமைக்க வேண்டும் மாநிலங்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தினாா்.

    மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம் புதன்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் கூடுதலாக மானியம் பெறவும், உற்பத்திக்கான ஊக்கத்தொகை பெறவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சா்க்கரைத் தொழில் துறைக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகளை மாற்றி அமைக்கவும், தனியாா் மற்றும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் பெற்ற சா்க்கரை வளா்ச்சி நிதிக் கடன்களை மாற்றி அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்க்கரை ஆலைகளின் நிதிப் புழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் கரும்பு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாட்டின் சா்க்கரைத் தொழில் துறையை புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai