Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள்2-ஆவது நாளாக மறியல்: போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள்2-ஆவது நாளாக மறியல்: போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 28th November 2019 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹெளஸ் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ரயில்வேயில் குரூப்-டி பணிக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தபடி பணியை வழங்கக் கோரி, மண்டி ஹெளஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், புதன்கிழமை 2-ஆவது நாளாக அவா்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ நோக்கி செல்லும் சாலை, லஷ்மி நகரிலிருந்து விகாஸ் மாா்க் நோக்கி செல்லும் சாலையை தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai