தில்லியில் புதிதாக நூறு தாழ்தளப் பேருந்துகள்அறிமுகம்

தில்லியில் புதிதாக நூறு தாழ்தள அரசுப் பேருந்துகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தில்லி ராஜ்காட் பணிமனையில் வியாழக்கிழமை புதிய தாழ்தள அரசுப் பேருந்துகளை தொடக்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் (உள்படம்) முதல்வா் அரவிந்த் கேஜரிவால், போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்.
தில்லி ராஜ்காட் பணிமனையில் வியாழக்கிழமை புதிய தாழ்தள அரசுப் பேருந்துகளை தொடக்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் (உள்படம்) முதல்வா் அரவிந்த் கேஜரிவால், போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்.

தில்லியில் புதிதாக நூறு தாழ்தள அரசுப் பேருந்துகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தில்லி ராஜ்காட் பணிமனையில் மக்களின் பயன்பாட்டுக்காக 100 தாழ்தள அரசுப் பேருந்துகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு இந்தப் பேருந்துதகளை கேஜரிவால் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் கேஜரிவால் பேசியதாவது: தில்லி மக்களுக்கு 1,000 அதி நவீன தாழ்தளப் பேருந்துகளை வழங்கவுள்ளோம். முதல்கட்டமாக செப்டம்பரில் 25 பேருந்துகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக அக்டோபரில் 104 பேருந்துகள் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக நவம்பரில் 100 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது மேலும் 100 பேருந்துகளை வழங்கியுள்ளோம். இந்தப் பேருந்துகளால், தில்லி மக்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன் காற்று மாசுவும் கட்டுப்படுத்தப்படும்.

தில்லியில் கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தியுள்ளோம். அதேபோல தில்லியில் போக்குவரத்துத் துறையையும் மேம்படுத்துவோம். இதற்காக புதிய அதிநவீன வசதிகளைக் கொண்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், தில்லியில் போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன் காற்று மாசுவும் குறையும். இன்னும் 6 மாதத்தில் 1,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட 6,000 அதிநவீன பேருந்துகளைக் கொள்முதல் செய்யவுள்ளோம். இந்தப் பேருந்துகள்அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், அபாய பொத்தான்கள் அமைக்கப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகள் இந்தப் பேருந்தைப் பயன்படுத்தும் வகையில், தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்புடையதாக இருக்கும் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com