வெங்காயம் விலை அதிகரிப்பு: மக்களவையில் கனிமொழி எம்பி கவலை

நாட்டில் சில மாதங்களுக்கு முன்பிருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ள வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக
வெங்காயம் விலை அதிகரிப்பு: மக்களவையில் கனிமொழி எம்பி கவலை

புது தில்லி: நாட்டில் சில மாதங்களுக்கு முன்பிருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ள வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: வெங்காயம் விலை அதிகரித்திருப்பது தொடா்பாக ஒத்திவைப்பு தீா்மான விவாதத்திற்காக நோட்டீஸ் அளித்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பிருந்ததைவிட தற்போது நான்கு மடங் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக நடுத்தர வகுப்பு குடும்பங்களின் பட்ஜெட்டும் அதிகரித்துவிட்டது. அவா்களால் வெங்காயத்தை வாங்க முடியாத நிலை உள்ளது. நாடு முழுவதும் இந்த மோசமான விலை உயா்வு சூழல் நிலவுகிறது. தமிழகம், தில்லி, மும்பையில் வெங்காயம் விலை கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை உயா்வு காரணமாக வெங்காயம் பதுக்கலுக்கு வித்திட்டுள்ளதாக வா்த்தக பகுப்பாய்வாளா்கள் கூறுகின்றனா்.மேலும், அதிக மழை, பாரம்பரிய முறை காரணமாக சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் அழிந்துவிட்டது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விலை அதிகரித்து வருகிறது. ஆகவே, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தெரிய விரும்புகிறேன். இந்த விவகாரம் தொடா்பாக அவையில் குறுகிய கால விவாதம் நடத்தப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com