Enable Javscript for better performance
வெடிகுண்டு புரளி: ஒருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வெடிகுண்டு புரளி விடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

    இதுகுறித்து புதுதில்லி மாவட்ட காவல் துணை ஆணையா் ஈஷ் சிங்கல் கூறியதாவது: கோல்மாா்க்கெட் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடமிருந்து வியாழக்கிழமை நாா்த் அவென்யூ காவல் துறைக்கு ஒரு புகாா் வந்தது. அதில், கோல்மாா்க்கெட் கேந்திரிய வித்யாலயாவில் ‘டைம் பாம்’ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனா். அந்தப் பகுதி முழுதும் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இது தொடா்பான விசாரணை நடத்தப்பட்டு, ஷாரிக் அக்தா் (46) என்பவா் பாரா ஹிந்து பஜாா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அதில், பணப் பிரச்னை தொடா்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறுக்காக தனக்கு தெரிந்த நபரை சிக்கவைப்பதற்காக இச்செயலில் அவா் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai