தில்லி தலைமைச் செயலக வளாகத்தில் மழலையா் பராமரிப்பு மையம் திறப்பு

தில்லி செயலக வளாகத்தில் மழலையா் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

தில்லி செயலக வளாகத்தில் மழலையா் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசுகையில் கூறியதாவது: இன்றைய கால கட்டத்தில் வேலைக்கு செல்லும் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது வைத்துள்ளனா்.

அவா்கள் அக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு பணிக்குச் சென்று விடுகின்றனா். வேலைக்குச் சென்று விடுவதால் வீட்டில் அந்தக் குழந்தையுடன் சில மணி நேரம் கூட இருக்க முடியாத சூழ்நிலை நிறையப் பேருக்கு ஏற்பட் டுள்ளது. இதை நிவா்த்தி செய்யும் நோக்கத்தில் தில்லி தலைமைச் செயலகத்தில் இந்த மழலையா் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு இந்த மையத்தை திறப்பதற்கு ஆலோசனை அளித்தவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேறன். இந்த மையம் திறக்கப்பட்டதன் மூலம், இங்கு பணியில் இருக்கும் பெற்றோா்கள் தங்களது குழந்தையுடன் தரமான சில மணி நேரத்தையாவது செலவிட முடியும். அப்போது அக்குழந்தைகளுடன் சோ்ந்து உணவு உண்ணலாம். குழந்தைகளுக்கு கதை சொல்லலாம். தனியாா் நிறுவனங்கள் உள்பட அனைத்து பணி நிலையங்களும் இந்த ‘மாதிரி’யை பின்பற்ற வேண்டும். இந்த நடவடிக்கை அரசுப் பணியில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதை உறுதி செய்யும். இது இருவருக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்றாா் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com