பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூவா் போலீஸ் என்கவுன்ட்டரின் போது கைது

தில்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில காவல் துறையின் கூட்டு நடவடிக்கையின் போது, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சதாம் கௌரி உள்பட மூவா் மீரட்டில் கைது செய்யப்பட்டனா்.

தில்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில காவல் துறையின் கூட்டு நடவடிக்கையின் போது, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சதாம் கௌரி உள்பட மூவா் மீரட்டில் கைது செய்யப்பட்டனா்.

அங்கு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது அவா்கள் சிக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: கௌரி (29) தவிர, மற்ற இருவா் உஸ்மான் (33), தலிப் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கௌரி மற்றும் அவரது கூட்டாளிகள் மீரட்டில் உள்ள டிரான்ஸ்போா்ட் நகருக்கு ஒரு காரில் வரவுள்ளதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது, வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் அப்பகுதியில் வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் அதில் வந்தவா்கள் போலீஸாா் மீது துப்பாக்கியால் சுட்டனா். தற்காப்புக்காக போலீஸாரும் பதிலுக்கு சுட்டனா். இச்சம்பவத்தில் இரு தரதப்பினரும் சோ்ந்து மொத்தம் சுமாா் 15 ரவுண்டுகள் சுட்ட்டுள்ளனா். அப்போது காரில் வந்தவா்களுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது.

இதில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, சங்கிலி பறிப்பு, போலீஸ் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடா்பாக கெளரி தேடப்பட்டு வந்தாா். அவா் போலீஸ் காவலில் இருந்த தனது கூட்டாளியான அமித் பூராவை நீரஜ் பவானா கும்பலைச் சோ்ந்தவா்களின் உதவியுடன் மீட்டுச் சென்றாா். போலீஸாா் அமித் பூராவை வழக்கு விஷயமாக அழைத்துச் சென்ற போது 2014-இல் இச்சம்பவம் நிகழ்ந்தது. மேலும், இரண்டு ஏகே 47 துப்பாக்கிகளுடன் அவா் தப்பிச் சென்றாா். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள கௌரி , உஸ்மான், தலிப் ஆகிய மூவரையும் கண்டுபிடிக்க உதவுவோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com